தொடர்புடைய செய்திகள்
- டிடிவி தினகரன் ஒரு பொருட்டே இல்லை: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஜெயக்குமார்..!
- முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு.. தீ விபத்தால் பலியான சோகம்..!
- இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுகிறதா? தமிழகத்தில் என்ன நடக்கும்?
- நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி: முதல்வர் அறிவிப்பு
- பல்லாவரம் திமுக எம்.எல்.ஏவின் மகன் - மருமகள் விவகாரம்: அதிமுக போராட்டம் அறிவிப்பு
அதிமுக கூட்டணிக்கு வர தயங்கும் அரசியல் கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி அப்செட்?
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டால் அதிமுக கூட்டணிக்கு பல கட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது வரை ஒரு கட்சி கூட அந்த கூட்டணியில் இணைந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை
மேலும் திமுக கூட்டணி உறுதியாக இருக்கும் நிலையில் அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட அதிமுக கூட்டணியில் இணைய தயக்கம் காட்டுவதாகவும் அதிமுக கூட்டணியில் இணைந்தால் வெற்றி பெற முடியுமா என ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அப்படியே அதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்றாலும் கூட எம்பியாக மட்டுமே இருக்க முடியும் என்றும் ஆனால் பாஜக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் கட்சிகள் கணக்கு செய்து வருகின்றன.
எனவே சின்ன சின்ன அமைப்புகள் கூட அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அப்செட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
