திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 நவம்பர் 2020 (09:59 IST)

நைட்டு டூ மார்னிங்: விடிய விடிய கரையை கடக்கும் நிவர்!!

நிவர் புயலானது அதிதீவிர புயலாக மாறி இன்று முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறது என்பதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. தற்போது சென்னையில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி இன்றிரவு கரையை கடைக்கும் என கூறப்பட்டுள்ளது. 
 
அதாவது, நிவர் புயலானது அதிதீவிர புயலாக மாறி இன்று முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் போது மணிக்கு 130 - 140 கிமி வேகத்தில் காற்று வீசும், மேலும் காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிமி வரை எட்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.