ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 25 மே 2018 (09:54 IST)

தமிழகத்திற்கு பரவிய நிபா வைரஸ்? - திருச்சியில் ஒருவருக்கு பாதிப்பு

திருச்சியை சேர்ந்த ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சமீபத்தில் கேரளாவில் நிபா வைரஸ் கேரள மாநிலம் கோழிகோடு பகுதியில் பரவ தொடங்கியது. தற்போது வரை நிபா வைரஸ் தாக்கி 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 
 
வௌவால் மூலம் பரவும் நிபா வைரஸ் 1998,1999 ஆண்டுகளில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில்தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. சளி, காய்ச்சல் அறிகுறியுடன் தொடங்கும் நோய், மூளைக்காய்ச்சல், கோமா என நீடித்து உயிரை பறிக்கும் தன்மையுடது. எனவே, இந்தியாவில் இந்த நோய் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகத்தை பொறுத்தவரை தகுந்த முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறோம் எனவே மக்கள் பயப்பட வேண்டாம் என சமீபத்தில் சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 
இந்நிலையில், திருச்சியை சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என இன்று காலை செய்திகள் வெளியானது. பெரியசாமி சமீபத்தில் சாலை போடும் பணிக்காக கேரளா சென்றுள்ளார். அங்குதான் அவருக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் எனக்கூறப்பட்டது. காய்ச்சல் காரணமாக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு நிபா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. எனவே, அவர் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
ஆனால், அவருக்கு நிபா வைரஸின் தாக்குதல் இல்லை. தேவையற்ற வதந்தியை பரப்ப வேண்டாம் என திருச்சி அரசு மருத்துவமனையின் மருத்துவர் தெரிவித்துள்ளார். ஆனாலும், இந்த செய்தி பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.