செம! இந்த ஒரே வார்த்தையால் நெட்டிசன்களால் கலாய்க்கப்படும் சுசீந்திரன்

Last Modified வியாழன், 26 ஏப்ரல் 2018 (09:31 IST)
பிரபல இயக்குனர் சுசீந்திரன் தனது டுவிட்டரில் நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றதை குறிப்பிட்டு' செம' என்று டுவீட் பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஏனெனில் இதே சுசீந்திரன் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் கிடையாது என்று செய்தி வந்தபோது 'செம' என்று டுவீட் போட்டிருந்தார்.

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் ரத்து ஆனதும் சந்தோஷப்பட்டு டுவீட் போட்ட சுசீந்திரன், தற்போது அதே சந்தோஷத்துடன் ஐபிஎல் போட்டியை ரசித்து டுவீட் போட்டுள்ளது முரண்பாடாக இருப்பதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர். சுசீந்திரனின் இந்த செயல் மக்களையும் விவசாயிகளையும் ஏமாற்றும் செயல் என்று டுவிட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :