சனி, 23 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2022 (12:06 IST)

என்ஐஏ ரெய்டுக்கு ஆக்டோபஸ் என பெயர்?

பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இண்டியா மீதான என்ஐஏ, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஆக்டோபஸ் என பெயர்.


பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (Popular Front Of India) அமைப்பின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை நடத்தியது. சமீபத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு இந்தியா முழுவதும் 10 மாநிலங்களில் பி.எப்.ஐ அமைப்பின் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தியது. தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பி.எப்.ஐ அமைப்பின் அலுவலகங்களில் நள்ளிரவு முதலாக சோதனை நடத்தப்பட்டது.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை மற்றும் காவல்துறை பி.எப்.ஐ அமைப்பு உறுப்பினர்களை கைது செய்தது. இந்த ரெய்டு மற்றும் கைது சம்பவங்களை எதிர்த்து பி.எப்.ஐ தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

11 மாநிலங்களில்  என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் மாநில போலீசார் நடத்திய சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. ஆந்திரப் பிரதேசம் (5), அசாம் (9), டெல்லி (3), கர்நாடகா (20), கேரளா (22) , மத்திய பிரதேஷ்(4), மகாராஷ்டிரா (20), புதுச்சேரி (3), ராஜஸ்தான் (2), தமிழ்நாடு (10) மற்றும்  உத்தரபிரதேசம்(8) ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இண்டியா மீதான என்ஐஏ, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஆக்டோபஸ் என பெயர் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.