1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2019 (08:03 IST)

நாட்டை மீட்டெடுக்க இரண்டாம் சுதந்திரப் போருக்கான தேவை: நல்லகண்ணு

நாடு பொருளாதார நெருக்கடியில் தவித்து வருவதாகவில் இதில் இருந்து நாட்டை மீட்க இரண்டாம் சுதந்திரப் போர் தேவை என்றும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
 
ஜிஎஸ்டி உள்பட பல காரணங்களால் நாடு முழுவதும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறைகள் படுவீழ்ச்சியில் உள்ளதால் தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் நாமக்கல்லில் நடைபெற்ற  வங்கி ஊழியர்கள் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பேசியபோது, ‘பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இரண்டாம் சுதந்திரப் போருக்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும், பாஜக அரசு, நாட்டை மிகவும் பின்தங்கிய நிலைக்கு கொண்டு சென்றுவிட்டதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
மேலும் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி நாட்டில் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நல்லகண்ணு, கார்ப்பரேட் கம்பெனிகளின் வாராக்கடனை வசூலிப்பதில் கோட்டை விட்டுவிட்ட பாஜக அரசு, விவசாயிகள் வாங்கிய கடனுக்கு ஜப்தி நடவடிக்கையும், கைது நடவடிக்கையும் எடுப்பதாக வேதனை தெரிவித்தார். அதுமட்டுமின்றி மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றான பயிர் காப்பீட்டு திட்டத்தை தனியாரிடம் வழங்கியதால், அது, விவசாயிகளுக்கு சரியாக போய் சேரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.