ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 11 செப்டம்பர் 2023 (07:21 IST)

சென்னையில் ஒரே இரவில் 2 பேர் படுகொலை.. கொலைகாரர்களை தேடி வரும் போலீசார்..!

சென்னையில் ஒரே இரவில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கொலைகாரர்களை போலீசார் வலைவீசி தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை எழும்பூர் மற்றும் மந்தைவெளி ஆகிய பகுதிகளில் ஒரே இரவில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 
 
சென்னை எழும்பூரில் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற 22 வயது இளைஞரை மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டி படுகொலை செய்துள்ளனர் அதேபோல் சென்னை மந்தவெளியிலும் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
 
கொலை செய்த மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.  தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதாக ஆளும் கட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தின் தலைநகரில் ஒரே இரவில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது புற்றுப்புள்ளி
 
Edited by Siva