1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (15:33 IST)

ரிலைன்ஸ் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்திற்கு 2.10 லட்சம் அபராதம்: நீதிமன்றம் உத்தரவு!

trends
ரிலைன்ஸ் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்திற்கு 2.10 லட்சம் அபராதம்: நீதிமன்றம் உத்தரவு!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்திற்கு 2.10  லட்சம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
எம்ஆர்பி விலையை விட கூடுதல் விலைக்கு உள்ளாடையை விற்பனை செய்ததாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்தின் மீது சிவப்பிரகாசம் என்பவர் திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். 
 
ரூ.265க்கு விற்க வேண்டிய உள்ளாடையை 278 ரூபாய்க்கு விட்டதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் விசாரணை செய்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
 
இந்த தீர்ப்பில் தமிழ்நாடு மாநில நல நிதிக்கு ரூபாய் இரண்டு லட்சமும் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூபாய் பத்தாயிரமும் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran