திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (12:04 IST)

இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுக தான் ஆட்சி செய்யும்: முதல்வர் ஸ்டாலின்!

MK Stalin
இனி தமிழ்நாட்டையே நிரந்தரமாக திமுக தான் ஆளவேண்டும் என மக்கள் மன நிறைவோடு முடிவெடுக்கும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறோம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் கூறினார். 
 
சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று பேசும்போது மக்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் அரசு நன்மை செய்து வருகிறது என்பதை தலை நிமிர்ந்து சொல்ல முடியும் என்றும் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் மக்களுக்காக பேசுவதாக ஏற்றுக் கொள்கிறது திமுக அரசு என்றும் அவர் தெரிவித்தார். 
 
தமிழகத்தில் ஜாதி சண்டை இல்லை, துப்பாக்கி சண்டை இல்லை சாதி சமய பூசல் ஏதுமின்றி மாநிலம் அமைதியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும் இனி தமிழ்நாட்டில் நிரந்தரமாக திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவோடு முடிவு செய்து விட்டார்கள் என்றும் அந்த வகையில் திமுக ஆட்சி நடத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் ஆருத்ரா நிதி நிறுவனம் குறித்து அவர் பேசும்போது குற்றவாளி யாராக இருந்தாலும் எந்த கொம்பனாக இருந்தாலும் காப்பாற்ற மாட்டோம் என்று உறுதி கூறுகிறேன் என்றும் காவல்துறையினரின் செயல்பாட்டில் குற்றம் குறை இருக்கலாம் ஆனால் குறையே இல்லை என்று சொல்ல மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran