1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 23 டிசம்பர் 2019 (16:47 IST)

ஓட்டு போட்டுட்டு பைசா வாங்கிகோங்க... அதிமுக அமைச்சர் பேச்சு!!

ஓட்டு போட்ட பின்னர் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அதிமுக அமைச்சர்  விஜயபாஸ்கர் பேசியுள்ளார்.
 
தமிழகத்தில் ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. 
 
ஜனவரி மாதம் வரும் பொங்கல் விழாவிற்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் செய்ய தேவையான அரிசி, வெல்லம், கரும்பு, முந்திரி போன்ற பொருட்கள் அடங்கிய பொங்கல் பையும், ரொக்க பணமும் வழங்குவது வழக்கம். 
 
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது பொங்கல் பை மற்றும் ரொக்கம் வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 
 
இந்த தடை உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும், மற்ற மாவட்டங்களில் பொங்கல் பை வழங்க தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், பிரச்சாரத்தின் போது வாக்காளர்களிடம் திறந்தவெளி வாகனத்தில் பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார். ஆனால், திமுகவினர் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றனர். நீதிமன்றம், பொங்களுக்கு பின் மக்களுக்கு பரிசுத் தொகை வழங்கலாம் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் விஜயபாஸ்கர்,  தேர்தலில் வாக்களித்த பின், ஆயிரம் ரூபாய் பொங்கள் பரிசை  வாக்காளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.