அரசு பேருந்தை ஒரு கிலோ மீட்டர் ஓட்டிய அமைச்சர் சிவசங்கர்!

bus
அரசு பேருந்தை ஒரு கிலோ மீட்டர் ஓட்டிய அமைச்சர் சிவசங்கர்!
siva| Last Updated: திங்கள், 5 ஜூலை 2021 (15:17 IST)
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதல் பல்வேறு நலத்திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றும் மக்கள் நலனுக்கான அறிவிப்புகள் தினந்தோறும் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தவாடி என்ற பகுதி மக்கள் தங்கள் கிராமத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை கடந்த ஆட்சியில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த நிலையில் தற்போது இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது

அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி என்ற கிராமத்தில் புதிய பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். தொடங்கி வைத்தது மட்டுமின்றி அவரே புதிய பேருந்து ஒரு கிலோமீட்டருக்கு ஓட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அந்த பகுதி மக்கள் அமைச்சர் சிவசங்கர் பேருந்து ஓட்டுவதை ஆச்சரியத்துடன் பார்த்தனர். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்பதே தற்போதைய அரசின் நோக்கம் என்று அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :