ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 ஜூன் 2020 (13:06 IST)

கூட்டுறவு வங்கிகளை ஆர்பிஐயுடன் இணைப்பதா? – அமைச்சர் செல்லூர் ராஜு எதிர்ப்பு!

கூட்டுறவு வங்கிகலை இந்திய ரிசவ் வங்கியுடன் இணைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்தியாவில் உள்ள கூட்டுறவு வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வருவதற்கான அவசர சட்டம் உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கூட்டுறவு வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணைவதால் என்ன பயன் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் எதிர்ப்புகளும் எழ தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ இது தவறான முன்னதாரணம் ஆகும் என கூறியுள்ளார். அதேசமயம் இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் “இது மாநில அரசுகளின் உரிமையை பறிப்பதாகும்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.