டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்: முக்கிய பேச்சுவார்த்தை!

duraimurugan
டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்: முக்கிய பேச்சுவார்த்தை!
siva| Last Updated: ஞாயிறு, 4 ஜூலை 2021 (18:13 IST)
தமிழக அமைச்சர் துரைமுருகன் இன்று இரவு டெல்லி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது காவிரி உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இன்று இரவு அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்கிறார்
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவ்த் அவர்களுடன் நாளை அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மத்திய அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் மேகதாது அணை விவகாரம் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் கேரளா, ஆந்திரா மாநிலங்களுடன் நதிநீர் விவகாரங்களும் ஆலோசனையில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் டெல்லி சென்றபோது அமைச்சர் துரைமுருகன் அவர்களும் உடன் சென்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்களை செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :