1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (11:23 IST)

எல்ஐசி பங்கு விற்பனை: 28 & 29 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தம்!

ஊழியர்கள் எல்ஐசி பங்கு விற்பனையை கண்டித்து வரும் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு. 

 
எல்ஐசி பங்குகளை வெளியிட சமீபத்தில் மத்திய அரசு முடிவு செய்தது என்பதும் இதற்கு எல்ஐசி நிர்வாகமும் ஒப்புக் கொண்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இது குறித்த சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் செபியிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் எல்ஐசி பங்குகளை வெளியிட செபி அனுமதி அளித்துள்ளது. மேலும் பங்கு வெளியீட்டு தேதியை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. எல்ஐசி பங்குகள் மூலம் 60 ஆயிரம் கோடியை மத்திய அரசு திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதனிடையே எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அந்நிறுவன ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டையில் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பங்கு விற்பனையை கண்டித்து வரும் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.