வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (13:05 IST)

கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்கள்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Stalin
''திமுக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில்  தமிழக மீனவர்களின்  நலனுக்காக  ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ராமநாதபுரம்  மாவட்டம் அருகேயுள்ள தேவிபட்டனம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து   நேற்று மாலையில்  முகவர்கள் கூட்டத்திற்கு 19 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான்   திமுக முகவர்கள் கலந்து கொண்டனர்.

பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் கலந்து கொண்டனர். 

இதையடுத்து, இன்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நல மாநாடு நடைபெற்று வருகிறது. இதில்,  கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

''கடந்த 2 ஆண்டுகளில்  தமிழக மீனவர்களின்  நலனுக்காக  ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

தமிழ் நாடு மீன்வள  பல்கலைக்கழகத்தில் மீன்வர்கள் குடும்ப மாணவகளுக்கான இட  ஒதுக்கீட்டை  5 தவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தபட்டுள்ளது. 

ஆண்டுக்கு விசைப்படகு டீசல் 18000 லிட்டர் நாட்டுப்படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டர் விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும், குடிமைப்பணி தேர்வுக்காக மீனவ சமுதாய மாணவர்களுக்கு   மாத சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது''  என்று கூறினர்.