1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified சனி, 7 ஜனவரி 2023 (15:45 IST)

ஒரு தனி நபரின் கையில் எல்லா திரையங்குகளின் நிர்வாகம்? திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று, இரும்பன் என்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது, பேசிய திருமாவளவன் எம்பி, தமிழ் நாட்டில்  சினிமா மூலம் அரசியல் மாற்றம் ஏற்படுத்த முடியும்! இதன் மூலம் ஆட்சி அதிகாரம் மாற்றுவதில் பங்குண்டு.

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணா நிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் சினிமாவில் இருந்து வந்தவர்கள் என்று தெரரிவித்தார்.

மேலும்,  தமிழகத்தில் ஒரு தனி நபரில் கையில்  எல்லா திரையரங்குகளின் நிர்வாகமும் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது என்றால் வி விநியோகஸ்தர்கள் நிலை என்னாகும்? சினிமாவும் கார்பரேட் மயமாதலுக்கு இரையாகி வருகிறது. இந்தக் கருத்தை யாரையோ மனதில் வைத்து பேசவில்லை சமூக பொறுப்புணர்வுடன் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.