வியாழன், 27 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2025 (12:06 IST)

நாய் வளர்க்க ரூ.750, மாடு வளர்க்க ரூ500..? செல்லப்பிராணிகளுக்கு கட்டணம்!! - மாநகராட்சி முடிவால் மக்கள் அதிர்ச்சி!

Madurai Corporation

மதுரை மாநகராட்சியில் வீட்டுப் பிராணிகள் மற்றும் பறவகைகள் போன்றவற்றை வளர்க்க கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வர ஏற்பாடாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ்நாடு முழுவதுமே பல பகுதிகளிலும் மக்கள் வீடுகளில் செல்லப் பிராணிகள், பறவைகள் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகின்றனர். மதுரை போன்ற பகுதிகள் மண்மணம் மாறாத கிராமங்களையும் உள்ளடக்கியது என்பதால் மாடு, குதிரை, ஆடுகள் என பல வித பண்ணை விலங்குகளுமே வீடுகளில் வளர்க்கப்படுகின்றன.

 

இந்நிலையில்தான் வீடுகளில் வளர்க்கப்படும் பிராணிகளுக்கு கட்டணம் விதிக்கும் முறையை அமல்படுத்த மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாடுக்கு ரூ.500, குதிரைக்கு ரூ.750, ஆடு ஒன்றுக்கு ரூ.150, நாய், பூனை வளர்க்க ரூ.750 என பல வகை பிராணிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இது மதுரைவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும் இந்த முடிவு தற்போது மாமன்ற கூட்டத்தின் தீர்மானமாகவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து தெரியவில்லை. மக்களிடையே கிடைக்கும் ஆதரவை பொறுத்தே இந்த திட்டம் முழுமையாக அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K