ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (08:20 IST)

சென்னை மழை: மின்சாரம் தாக்கி ரஜினியின் ‘லால் சலாம்’ பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி!

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில்  நேற்று முழுவதும் பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சென்னை பல தீவுகள் போல காட்சியளித்தது. பெரும்பாலான சாலைகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. புயல் கரையைக் கடந்துள்ள நிலையில் தற்போது வெள்ள நீரை வடிக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று சென்னையில் மட்டும் மின்சாரம் தாக்கி மூன்று பேர் பலியாகியுள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை கே கே நகர் பகுதியில் மளிகை சாமான்கள் வாங்க சென்ற பிரவீன் பாஸ்கர் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இவர் ரஜினிகாந்த் நடித்த ‘லால் சலாம்’ படத்தின் எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.