ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2023 (21:51 IST)

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

karur
அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்து  தெரிவித்தும், புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பாகவும், நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது சம்பந்தமாகவும் கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
 
கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில், கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பில் வாழ்த்து தெரிவித்து, தொடர்ந்து அண்ணன் எடப்பாடியார் அவர்கள் வழியில் இன்னும் நூறு ஆண்டுகள் பயணிப்போம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
மேலும் கழக பொதுச்செயலாளர் அவர்களின் ஆணைக்கினங்க கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய உறுப்பினர் அட்டையை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை மற்ற மாவட்டங்களை விட கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் சேர்த்து மாவட்ட கழகத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
 
இந்நிகழ்ச்சியில்  கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் சின்னசாமி,   மாவட்ட இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன், மாவட்ட துணை செயலாளர் அலம் தங்கராஜ், மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், கரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் பசுவை சிவசாமி,  கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் நகுல் சாமி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, நகர கழக நிர்வாகிகள் பலர்  கலந்துகொண்டனர்