திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (22:32 IST)

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய கமல் திட்டம்!

பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பின்னர், அவரது கட்சியில் இருந்து முக்கிய பொறுப்பாளர்கள் பதவி விலகினர்.

இந்த நிலையில், சமீபத்தில் வெளியான கமலின் விக்ரம் படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள கமல்  2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகியுள்ளார்.  அதனால்,சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்தில்,  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.