வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 21 மே 2021 (18:44 IST)

ரூ.2000 இரண்டாம் தவணை எப்போது? முதல்வர் ஸ்டாலின் தகவல்

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் மே 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். இதனை அடுத்து அவர் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார் என்பதும் குறிப்பாக ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 வழங்கப்படும் என்றும் முதல் கட்டமான 2000-ம் வழங்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார். அவர் அறிவித்தவாறு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 வழங்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அடுத்தகட்ட ரூபாய் 2000 கலைஞர் பிறந்த நாளன்று ஜூன் மூன்றாம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கு பாரபட்சம் காட்டுகிறது என்றும் விரைவில் டெல்லி சென்று தடுப்பூசி ஒதுக்கீடு, ஆக்சிஜன் வினியோகம் குறித்து பிரதமரிடம் பேசுவோம் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் ஊரடங்கு நீடிப்பது குறித்து நாளை மருத்துவ வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் ஆலோசனைக்கு பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்