1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. josh charles martin says adhav arjuna is the reason

கரூர் சம்பவத்தில் சகுனி ஆதவ் அர்ஜுனாதான்!.. ஜோஸ் சார்லஸ் மார்ட்டீன் ஷாக்!...

adhav arjuna
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அவரைக் காண பல ஆயிரம் மக்கள் கூடியிருந்தனர். ஏனெனில் மதியம் 12:30 மணிக்கு விஜய் வருவதாக அறிவிக்கப்பட்டதால் காலை முதலே விஜயை பார்க்க பலரும் கூடினர்..

ஆனால் விஜய் அந்த இடத்திற்கு செல்ல இரவு 7 மணி ஆகிவிட்டது. விஜய் மடையில் பேசிக்கொண்டிருந்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கூட்டு நெரிசல் ஏற்பட்டது.. அப்போது பலரும் கீழே விழுந்தனர்.. கீழே விழுந்தவர்கள் மீதும் பலரும் ஏறி இறங்க மூச்சு திணறி பலரும் உயிரிழந்தனர்.. இறுதியாக 41 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது..

இது விஜயை மனரீதியாக முடக்கியது.. அவர் வீட்டை விட்டு வெளியே வரவே இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டது..  பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்து நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் சொன்னார்.

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை விஜய் டெல்லி சென்று வாக்குமூலம் அளித்தார். தற்போது மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.. மேலும் தவெக முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல்குமார், ஆகியோரையும் டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ விசாரணை நடத்தியது..

இந்நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துணரும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டீன் ஒரு பகிர் தகவலை கூறியிருக்கிறார்.. கரூர் துயர சம்பவத்தில் 41 அப்பாவி உயிர்கள் பலியான கோர சம்பவத்திற்கு பின்னணியில் சகுனியாக இருந்து காய் நகர்த்தியவர் ஆதாவ் அர்ஜூனாதான். சிபிஐ விசாரணையில் இவரின் முகத்திரை கிழியும் என்பது உறுதி. செந்தில் பாலாஜியை திமுகவிற்கு அழைத்து சென்றதிலும் இவருக்கு பெரிய பங்குண்டு’ என அவர் கூறியிருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஈரானுக்கு விபூதி அடிச்ச இந்திய கப்பல் மாலுமி!.. ஹோர்மூஸ் நீரிணையை தாண்டிய சம்பவம்!..