திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 30 மே 2017 (09:46 IST)

ஜெயலலிதா நல்ல திறமையானவர், அவரை சாகடித்து விட்டார்கள்: உருகும் டிராபிக் ராமசாமி!

ஜெயலலிதா நல்ல திறமையானவர், அவரை சாகடித்து விட்டார்கள்: உருகும் டிராபிக் ராமசாமி!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியுள்ளார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. அவரை நல்ல திறமையானவர் எனவும், சாகடித்துவிட்டார்கள் எனவும் கூறியுள்ளார் டிராபிக் ராமசாமி.


 
 
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி அவருக்கு எதிராக பல வழக்குகளையும் தொடுத்தார். மதுரை கிரானைட் தொடர்பாக வழக்கு தொடர்ந்து சகாயம் தலைமையில் அதனை விசாரிக்க உத்தரவையும் பெற்றார்.
 
மேலும் போக்குவரத்துக்கு இடையூராக அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்களை அகற்ற போராடினார். பல சமையங்களில் தானே களத்தில் இறங்கி அவற்றை கிழித்து அகற்றினார். அதில் ஜெயலலிதாவின் பேனர்களும் விதிவிலக்கல்ல. ஜெயலலிதாவுக்கு எதிராக பல நேரங்களில் கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தார்.
 
முதியவர் என்று கூட பார்க்காமல் ஜெயலலிதா தலைமையிலான அரசு அவரை நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கைது செய்தது. ஜெயலலிதாவின் மீதும், அவரது தலைமையிலான அரசின் மீதும் காட்டமாகவும், கடுமையாகவும் விமர்சனங்களை வைத்து வந்த டிராபிக் ராமசாமி தற்போது அவரை புகழ்ந்து பேசியுள்ளார்.
 
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி, ரஜினிகாந்த் தைரிய சாலியாக இருந்திருந்தால் எப்போதோ அவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். ரஜினி சினிமாவோடு இருக்கட்டும். மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது.
 
முன்னதாக பேசிய அவர், நல்ல திறமையுள்ள ஜெயலலிதாவை சாகடித்து விட்டனர். தற்போது இருப்பது மக்களுக்கான அரசே இல்லை என ஜெயலலிதாவை புகழ்ந்தும் தற்போதைய அரசை விமர்சித்தும் பேசினார்.