திரும்ப திரும்ப வேட்பாளர்களை மாற்றும் ஜெயலலிதா: மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்


Caston| Last Modified புதன், 6 ஏப்ரல் 2016 (18:28 IST)
நேற்று முன்தினம் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. 234 தொகுதிகளில் 227 அதிமுக வேட்பாளர்களை களம் இறக்குகிறார் அவர்.

 
 
வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே ஜெயலலிதா எப்படியும் இதில் பல மாற்றங்களை செய்வார் என பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலையே அருப்புகோட்டை தொகுதி வேட்பாளரை மாற்றினார்.
 
மீண்டும் இன்று மதியம் மேலும் 10 வேட்பாளர்களை மாற்றிய அவர் மீண்டும் பிற்பகலில் பல்லாவரம் தொகுதி வேட்பாளரை மாற்றி சி.ஆர்.சரஸ்வதியை அந்த தொகுதியின் வேட்பாளராக அறிவித்தார்.
 
இத்தோடு இன்றைய மாற்றம் நின்றுவிடவில்லை, மேலும் மாலையில் மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.பாண்டியனை மாற்றி அவருக்கு பதிலாக ராஜன் செல்லப்பாவை வேட்பாளராக அறிவித்துள்ளார்.
 
வேட்புமனு தாக்கல் வரை அதிமுகவின் இந்த வேட்பாளர் பட்டியல் மாற்றம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.
 


இதில் மேலும் படிக்கவும் :