பொறுத்து பார்த்த மக்கள் கோட்டை நோக்கி வருகின்றனர்! – தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்!

தமிழகத்தில் புதிய தலைமை செயலாளர் இவர்தான்: அதிரடி அறிவிப்பு
Prasanth Karthick| Last Modified புதன், 15 செப்டம்பர் 2021 (10:40 IST)
மக்கள் பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்து வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு இயங்கி வரும் நிலையில் நாள்தோறும் மக்கள் பலர் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க தலமை செயலகம் வருவது அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட அளவில் மனு அளித்து பொறுத்து பொறுத்து பார்த்த மக்கள், நடவடிக்கை எடுக்காததால் குக்கிராமங்களில் இருந்து கோட்டையை நோக்கி புறப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

கனவுகள் நிறைந்த கண்களோடும், கவலைகள் நிறைந்த இதயத்தோடும், கோட்டையில் மக்கள் காத்திருப்பதை பார்க்கும் போது மனம் கனப்பதாக தெரிவித்துள்ள அவர் மக்கள் பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்து வைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :