வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2024 (21:26 IST)

இந்தியா அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது- ப.சிதம்பரம்

chidamparam
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது.
 
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட  நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர  பிரசாரம் மற்றும் வாக்குகள் சேகரிப்பில்  ஈடுபட்டுள்ளன.
 
இந்த நிலையில், தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சென்னை மயிலாப்பூரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பிரசாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசியதாவது; அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 2 பேர் முதல் அமைச்சராக இருந்தனர். அதில் முத்தான ஒரு திட்டத்தை யாராவது சொல்ல முடியுமா?ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மூன்றே ஆண்டுகளில் பல முத்தான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
 
10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கொண்டு வந்த முத்தான திட்டங்கள் என்னென்ன . புயல், வெள்ள பாதிப்பு நிதியை கூட பாஜக அரசு தரவில்லை.  நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளது.  விலைவாசியும்   உயர்ந்துள்ளது. இப்படியிருக்க பிரதமர் மோடி எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழகத்திர்கு ஓட்டு கேட்டு வருகிறார்? என்று கூறினார். 
 
மேலும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சரை கைது செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என கற்பனை செய்திருக்கிறீர்களா? சினிமாவில் கூட இப்படிப் பார்த்ததில்லை.  நாவலிலும் படித்ததில்லை.  பல  நாடுகளின் பார்வையில் இந்தியா அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.