வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (12:53 IST)

தேர்தல் அன்று விடுமுறை தராவிட்டால் சட்ட நடவடிக்கை! – தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர் இயக்குனரகம் எச்சரிக்கை!

ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்கு செலுத்த தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் இயக்குனரகம் எச்சரித்துள்ளது.



இதுகுறித்து தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு மக்கள் பிரதிநித்துவ சட்டம் பிரிவு 1358ன் படி தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாள் அன்று வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.


எனவே அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பான புகார்களுக்கு தமிழ்நாடு மாநில கட்டுப்பாட்டு அறை அலுவலரை 9444221011 என்ற எண்ணில் அழைத்து புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K