திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (16:20 IST)

நெல்லையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி மற்றும் அக்டோபர் 9ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நாளை இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெறுவதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.