இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!
இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இதையடுத்து புயலாக மாறும் வாய்ப்பும் உள்ளது. தமிழகம் மற்றும் இலங்கை இடையே கரை கடக்கும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. தற்போது, 13 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Siva