ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (13:56 IST)

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி நெல்லை தென்காசி விருதுநகர் மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் தென் தமிழகம் மற்றும் புதுக்கோட்டை திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது