ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 27 மே 2023 (15:25 IST)

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் கோடை காலம் என்பதால் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வரும் ஜூன் 1 ஆம் தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த   நிலையில், வெயில் வாட்டி வருவதால் மாணவர்களின்  நலனை கருத்தில் கொண்டு வரும் 7 ஆம் தேதி திறக்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது.
 
மேலும், தமிழகத்தின், நீலகிரி, திருச்சி, சேலம்,  நாமக்கல், தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.