செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 ஜூன் 2025 (17:01 IST)

உயிர் நீத்த 270 பேரின் நினைவாக மரக்கன்றுகள்.. மதுரை பொறியாளரின் நெகிழ்ச்சியான செயல்..!

உயிர் நீத்த 270 பேரின் நினைவாக மரக்கன்றுகள்.. மதுரை பொறியாளரின் நெகிழ்ச்சியான செயல்..!
அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் நீத்த 270 பேரின் நினைவாக, மதுரை மண்ணில் அதே எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடப்பட்டு ஒரு நெகிழ்ச்சியான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
 
 புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நிகழ்ந்த இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 29 பேர் என மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஐந்து மருத்துவ மாணவர்களும் அடங்குவர்.
 
ஒரு லட்சத்திற்கும் மேல் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபட்டு வரும் பொறியாளர் சோழன் குபேந்திரன் தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு நடந்தது. "இறந்தவர்களின் நினைவுகள் இந்த மரங்கள் மூலம் வாழும்; அவை மற்றவர்களுக்கு ஆக்ஸிஜனையும் வாழ்வையும் தரும்" என்று அவர் உருக்கமாகக் கூறினார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்களும் இந்த உன்னத பணியில் இணைந்து, ஒவ்வொரு மரக்கன்றையும் நட்டு தங்கள் மரியாதையை செலுத்தினர்.
 
மதுரை மண்ணில் நடப்பட்ட இந்த மரக்கன்றுகள், உயிர் நீத்தவர்களின் வாழும் நினைவுகளாக நின்று, இயற்கையின் மூலம் ஒரு அமைதியையும் நம்பிக்கையையும் வழங்குகின்றன.
 
Edited by Mahendran