பருந்துகளால் நான் பந்தாடப்படுகிறேன்: காயத்ரி ரகுராம் அதிர்ச்சி டுவீட்

Last Modified செவ்வாய், 27 நவம்பர் 2018 (09:17 IST)
தமிழக பாஜகவில் உறுப்பினராக இருப்பவரும், பாரதிய ஜனதாவின் இளைஞர் அணி பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவில் செயற்குழுவில் உறுப்பினராகவும் இருக்கும் நடிகை, டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம் சமீபத்தில் குடித்துவிட்டு வண்டி ஓட்டியதாக சர்ச்சைகள் எழுந்தன. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காயத்ரி விளக்கம் அளித்தபோதிலும் இதுகுறித்த சர்ச்சைக்குரிய பதிவுகள் சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் கூறியபோது, ' தமிழக பாஜகவில் உட்கட்சி அரசியல் இருக்கின்றது. எனக்கு இருக்கும் புகழை பார்த்து ஒருசிலர் அச்சப்படுகின்றனர்.
என் மீது களங்கம் சுமத்த சிலருக்கு பணம் வழங்கப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அப்படிப்பட்ட பருந்துகளால் நான் பந்தாடப்படுகிறேன். சமீபகாலமாக பாஜகவில் நான் சுறுசுறுப்பாக இயங்கவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் சிலர் தாழ்ந்த தந்திரங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.


எல்லாம் கர்மா. அவர்கள் என்றாவது வெல்ல வேண்டும் என பிரார்த்திக்கிறேன். ஆனால், இதே மோசமான இதயத்தோடு அல்ல. இப்படிப்பட்ட அரசியல் பற்றி பதிவிடக்கூட எனக்கு விருப்பமில்லை. இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்


இதில் மேலும் படிக்கவும் :