ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2023 (18:03 IST)

'உங்களை தேடி யோகா' ஈஷாவின் இலவச யோகா வகுப்புகள் - சர்வதேச யோகா தினத்தையொட்டி சிறப்பு ஏற்பாடு

Isha Yoga
சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தியா முழுவதும் ‘உங்களை தேடி யோகா’ என்ற திட்டத்தை ஈஷா யோகா மையம் முன்னெடுத்துள்ளது.


 
இதன் மூலம், பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திலேயே நேரிலோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ இலவசமாக யோகா கற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் குறைந்தப்பட்சம் 15 பேர் ஒன்றிணைந்தால் ஈஷாவின் யோகா பயிற்றுநர்கள் நேரில் வந்து யோகா கற்றுக்கொடுப்பார்கள்.

இவ்வகுப்பில், யோக நமஸ்காரம், நாடி சுத்தி, ஈஷா க்ரியா போன்ற மிகவும் எளிமையான அதேசமயம் சக்திவாய்ந்த யோக பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் முதுகுதண்டும் நரம்பு மண்டலமும் வலுபெறும், மன அழுத்தம் குறையும், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

உங்கள் இருப்பிடத்தில் யோகா வகுப்பை நடத்த விரும்புபவர்கள் Isha.co/idysessionrequest என்ற லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் வாயிலாக இலவசமாக யோகா கற்றுக்கொள்ள isha.co/free-yogawebinars என்ற லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம்.