திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 18 டிசம்பர் 2021 (18:30 IST)

தமிழகத்தில் இரண்டு நிழல் முதலமைச்சர்கள் இருக்கின்றார்கள்: ஜெயகுமார்

தமிழகத்தில் ஒரு முதலமைச்சருக்கு இரண்டு நிழல் முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் முதலமைச்சர் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் என்று ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கூறிவரும் நிலையில் முதலமைச்சர் எடுக்கும் முடிவுகளுக்கு பின்னால் அவருடைய மருமகன் சபரீசன் இருப்பதாகவும் ஒரு சில முக்கிய முடிவுகளை உதயநிதி எடுப்பதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தின் முதலமைச்சர் முக ஸ்டாலின் இருக்கிறார் என்றால் அவருக்கு நிழல் முதலமைச்சர்களாக சபரீசன் மற்றும் உதயநிதி ஆகியோர் இருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது