ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2024 (13:19 IST)

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

cyclone
வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், தற்போது தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மியான்மர் கடல் பகுதியில் இருக்கும் காற்று சுழற்சி வடகிழக்கு காற்றை தடை செய்வதால் தான் இந்த தாமதம் ஏற்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நவம்பர் 6 அல்லது 7ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டு, அதன் பிறகு 8 அல்லது 9ஆம் தேதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் இப்போது வரை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை என்றும், மூன்று முறை காற்று தாழ்வு பகுதி தள்ளிப்போனதற்கு மியான்மர் கடல் பகுதிகளில் இருக்கும் காற்று சுழற்சி, காற்றை தடை செய்வதால் தான் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும், அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Mahendran