ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: ஞாயிறு, 17 நவம்பர் 2019 (09:34 IST)

ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்; உயர்கல்வித்துறை விசாரணை

ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை தொடர்பாக மத்திய உயர்கல்வித்துறை விசாரணை நடத்த உள்ளது.

கடந்த 9 ஆம் தேதி சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த முதலாமாண்டு மாணவி ஃபாத்திமா விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். பேராசிரியரின் தொடர் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.

இது குறித்த விசாரணையை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் சுப்பிரமணியம் சென்னை வந்துள்ளார்.

முன்னதாக மத்திய குற்றப்பிரிவு, ஃபாத்திமாவின் தந்தை லத்தீஃபிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் ஃபாத்திமாவின் லேப்டாப், செல்ஃபோன் ஆகியவற்றை ஆய்வு செய்ய வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.