என்னங்கடா உங்க ஆட்சி? தொதித்தெழுந்த பிரபல இயக்குனர்

tiruna
Last Modified வியாழன், 14 மார்ச் 2019 (08:40 IST)
பொள்ளாச்சி விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய போராட்டம், நடத்தினால் போராட்டக்காரர்களை கைது செய்கிறார்கள் என இயக்குனர் நவீன் ஆவேசத்துடன் பேசியுள்ளார்.
 
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி  பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். இவ்வழக்கில் வசந்தகுமார், செந்தில், சதீஷ், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவன்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. இச்சம்பவம் நாடெங்கும் உள்ள மக்களை கொந்தளிப்படைய செய்துள்ளது.

இச்சம்பவத்திற்கு நடிகர்கள் சத்யராஜ், சிபிராஜ், ஜி.வி.பிரகாஷ், சித்தார்த், பாடலாசிரியர் விஜய், நடிகைகள் அதுல்யா ரவி, சின்மயி ஆகியோர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்த கேடுகெட்ட செயலில் ஈடுபட்டவன்களை கைது செய்வதை விட்டுவிட்டு அவர்களை கைது செய்யக்கோரி போராட்டம் செய்பவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
naveen
 
இந்நிலையில் மூடர்கூடம் படத்தின் இயக்குனர் தனது டிவிட்டர் பக்கத்தில் தப்பு செஞ்சவனுங்கள விட்ருங்க. அவனுகள அரஸ்ட் பண்ணுங்கடானு போராட்டம் செஞ்சவங்கள அரஸ்ட் பண்ணுங்க. என்னங்கடா உங்க ஆட்சி? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :