ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2019 (20:47 IST)

ஜி.டி.நாயுடுவிற்கு பின் செல்லூர் ராஜூ தான் விஞ்ஞானி: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தேனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குறித்து சமீபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்து பேசிய நிலையில் தற்போது செல்லூர் ராஜூவுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது பரப்புரையில் பதிலடி கொடுத்துள்ளர.
 
ஜி.டி.நாயுடுவிற்கு பிறகு மிகப்பெரிய விஞ்ஞானியாக இருப்பவர் செல்லூர் ராஜூ என்றும், நவீன கால தெனாலிராமன் போல செல்லூர் ராஜூ  வாழ்ந்து வருகிறார் என்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக எண்ணெயும் தண்ணீரும் கலந்த கூட்டணிதான் காங்கிரஸ் - திமுக கூட்டணி என்றும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது என்று செல்லூர் ராஜூ பேசியதற்குத்தான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மேற்கண்டவாறு பதிலடி கொடுத்துள்ளார்.
 
மேலும் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 'காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் செய்யப்படும் என்றும், கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுத்ததில் தவறில்லை என்றும் கூறினார். 
 
மேலும் தேனியின் பிரச்சனைகள் பற்றி இளங்கோவனுக்கு என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்பிய துணை முதல்வர் மகன் ஓ.பி.ரவீந்தரநாத் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 'தேனியின் பிரச்சனையே நீயும் உங்க அப்பாவும்தான் என்று அதிரடியாக பதிலளித்தார்.