அதிமுக கூட்டத்தில் சலசலப்பு: ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்!

Last Updated: செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (21:17 IST)
அதிமுக கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினரும், துணௌ முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் வாக்குவாதத்தில் ஏடுபட்டதால் கூட்டத்தில் சிறுது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 
திருவள்ளூர் அருகே அதிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது, ஓபிஎஸ் அணியினர் ஈபிஎஸ் அணியினர் மீது குற்றம் சாட்டியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இரு அணிகளின் ஆதரவாளர்களுக்கிடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. 
ஈபிஎஸ் அணியினர் எங்களுக்கு எந்த வித முன்னுரிமையும் தருவதில்லை என ஓபிஎஸ் அணியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் எந்த வித அரசு ஒப்பந்தங்களையும் தங்களுக்கு தருவதில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஈபிஎஸ் அணியினர் மீது குற்றம் சாட்டினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :