திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2024 (10:12 IST)

சென்னையில் ஐபிஎல் போட்டிகள்: 6 நாட்களுக்கு கூடுதல் மின்சார ரயில் இயக்கம்..!

Chennai Train
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் ஆறு நாட்களில் கூடுதலாக மின்சார ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே உள்ளது. 
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் ஏப்ரல் 8, 23, 28 மற்றும் மே 1, 24 , 26 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெற இருப்பதால் இந்த நாட்களில் கூடுதலாக  மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும். 
 
குறிப்பாக வேளச்சேரி ரயில் நிலையத்திலிருந்து இரவு 10.40, 11.05 மணிக்கும், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து 11.20, 11.45 மணிக்கு இந்த ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் நாட்களில் ஏற்கனவே மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மின்சார ரயில்களும் இயக்கப்பட உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
Edited by Mahendran