செவ்வாய், 18 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: புதன், 30 ஜூலை 2025 (11:48 IST)

Election Fever: மீண்டும் தமிழகம் வரும் மோடி! நடராஜர் கோயிலில் இருந்து மன் கீ பாத்!

PM Modi in gangaikonda chozhapuram

சமீபத்தில் ஆடித்திருவாதிரை விழாவுக்காக தமிழகம் வந்து சென்ற பிரதமர் மோடி அடுத்த மாதம் மீண்டும் தமிழகம் வருகிறார்.

 

ராஜேந்திரசோழனின் பிறந்தநாளான ஆடித்திருவாதிரை கங்கைக்கொண்ட சோழபுரத்தில் மத்திய அரசால் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திரமோடி அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இனி பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வர வாய்ப்புகள் உள்ளதாக பேசிக் கொள்ளப்பட்டது.

 

இந்நிலையில் அடுத்த மாதமும் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். ஆகஸ்டு 26ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு பயணம் செய்து சாமி தரிசனம் செய்ய உள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து மன் கீ பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே அவர் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தற்போது கங்கைகொண்ட சோழபுரம் வந்த பிரதமர் மோடி அதை தொடர்ந்து திருவண்ணாமலை, காஞ்சிபுரம் நடராஜர் கோவில் என சிவ ஸ்தலங்களாக பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K