திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 5 பிப்ரவரி 2020 (14:15 IST)

ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி உயிருடன் மீட்பு !

ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி

ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டியை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று காலையில், பேசின் பிரிட்ஸ் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ஒருவர் சென்னை - பெங்களுர் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் முன் மாட்டிக் கொண்டார். இதை அறிந்து கொண்ட ரயில் ஓட்டுநர், சமயோஜிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தி அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் செயல்பட்டார்.
 
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பெண் காவலர் மற்றும் சிலர் அங்கு ரயில் இன்ஜினில் சிகியிருந்த மூதாட்டியை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
 
ரயில் ஓட்டுநர் மெல்ல, மெல்ல ரயிலை பின்னால் எடுக்க, தண்டவாலாத்தில் முகம் பார்த்தபடி ரயில் இருந்த மூதாட்டி ரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவலை  ஊடகவியலாளர் மு. குணசேகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.