திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 25 நவம்பர் 2020 (10:03 IST)

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய திமுக எம் எல் ஏ பூங்கோதை!

உடல்நலக்குறைவு காரணமாக அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திமுக எம் எல் ஏ பூங்கோதை குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

கட்சியில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு நெல்லையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏ பூங்கோதை, உயர்தர சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் திமுக வின் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது உடல்நிலை குறித்து ’உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்த என்னை பணியாளர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். இரத்த பரிசோதனையில் என் உடலில் இரத்தம் உறையும் தன்மை குறைவாகவும், சர்க்கரை அளவு குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டு மூளை, நெஞ்சு சி.டி ஸ்கான் எடுக்கப்பட்டு தக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.’ என்று தெரிவித்து தான் தற்கொலை முயற்சி மேற்கொள்ளவில்லை எனக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதையடுத்து சிகிச்சையில் குணமான அவர் இப்போது வீடு திரும்பியுள்ளார். மருத்துவர்கள் இன்னும் சில நாட்கள் அவரை ஓய்வெடுக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்.