புதன், 11 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 29 நவம்பர் 2025 (15:31 IST)

செங்கோட்டையன் 'பா.ஜ.க. ஸ்லீப்பர் செல்': விஜய்யின் த.வெ.க-வில் இணைந்ததற்கு அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம்!

செங்கோட்டையன் 'பா.ஜ.க. ஸ்லீப்பர் செல்': விஜய்யின் த.வெ.க-வில் இணைந்ததற்கு அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம்!
அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது குறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
 
செங்கோட்டையன் பா.ஜ.க.வின் "ஸ்லீப்பர் செல்" ஆக த.வெ.க-வுக்குள் ஊடுருவியுள்ளதாக அமைச்சர் ரகுபதி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். "அவர் இப்போதும் பா.ஜ.க. தலைமையின் 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் தான் செயல்படுகிறார். டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசிய பின், த.வெ.க-வில் இணைந்தது, விஜய்யின் கட்சியை பா.ஜ.க-வுடன் நெருக்கமாக்கும் ஒரு பணி," என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
மேலும், அ.தி.மு.க-விலிருந்து நிர்வாகிகள் வெளியேறுவது அரசியல் முக்கியத்துவம் அற்றது என்று நிராகரித்த அமைச்சர், த.வெ.க-வின் ஊழல் ஒழிப்பு குறித்து பேசினார். "சினிமாவில் முதல் பணம் கறுப்பு பணம்தான். 200 கோடி ரூபாய் சம்பாதிப்பவர்கள் கூட வரி கட்டுவதில்லை," என்று திரையுலகை விமர்சித்த அவர், ஊழலற்ற ஆட்சியை வழங்குவதாக கூறுபவர்கள் முதலில் தங்கள் சொந்த ஊழலை அம்பலப்படுத்த வேண்டும் என்று சவால் விடுத்தார்.
 
Edited by Mahendran