ஒடிந்த விஜயகாந்த்; சரிந்த தேமுதிக சாம்ராஜ்ஜியம்; சரித்தது யார்??
தமிழக அரசியலில் விஜயகாந்தின் தேமுதிக தனது இடத்தை கோட்டைவிட்டு ஒன்றுமில்லாமல் உள்ளது.
விஜய்காந்த் துவங்கிய தேமுதிக மக்கள் ஆதரவை பெற்று ஒரு கட்டத்தில் எதிர்கட்சியாகும் தகுதியையும் பெற்றது. ஆனால், இப்போது விஜயகாந்த் உடல்நலம் காரணமாக அரசியல் மற்றும் கட்சி பணிகளில் இருந்து விலகி இருப்பதால் தேமுதிக சரிவை நோக்கி பயணித்து வருகிறது.
அதிமுக, திமுக அல்லாமல் 3வது கட்சியை உருவாக்க வேண்டும் என தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ் மாநில காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்தன. ஆனால், அந்த தேர்தல் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இப்போது தேமுதிகவுடன் இருந்த கட்சிகள் எல்லாம் இந்த தேர்தலின் போது பக்காவான கூட்டனி அமைத்து ஆட்சியில் முக்கிய பதவிகளையும் கைப்பற்றியுள்ளனர். தேமுதிகவோ நாளுக்கு நாள் தனது பலத்தை இழந்துக்கொண்டே இருக்கிறது.
இப்போது நடந்து முடிந்த இந்த தேர்தலில் எந்த விதமான நல்ல விஷயமும் நடக்காமல் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது தேமுதிக. விஜயகாந்த என்பவரின் குரல் ஒடிந்ததால் தேமுதிக சாம்ராஜ்யமும் சரிந்த வண்ணமே உள்ளது.
விஜயகாந்த மனைவி பிரேமலதா அவர்களது மகன், பிரேமலதா தம்பி சுதீஷ் என யார் வந்தும் தேமுதிகவை சரிவில் இருந்து மீட்க முடியவில்லை. அடுத்தடுத்து வரும் காலங்களில் தேமுதிகவின் நிலை என்னவென்பது கேள்வி குறியாகவே உள்ளது...