தேமுதிக கரைவேட்டியுடன்தான் இருப்பேன்: சந்திரகுமார் பேட்டி


Suresh| Last Updated: புதன், 6 ஏப்ரல் 2016 (13:16 IST)
தேமுதிகவில் இருந்து தங்களை நீக்கியது செல்லாது என்றும், தான் இதே கட்சிகரை வேட்டியுடன்தான் இருப்பேன் என்றும் சந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

 

 
இது குறித்து சந்திரகுமார் கூறுகையில், "தேமுதிகவை உருவாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்றும், வைகோவுடன் கூட்டணி வைத்துள்ளதால் ஜெயலலிதாவுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கிறார் விஜயகாந்த் என்றே எண்ணத் தோன்றுகிறது.
 
மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி வைத்திருப்பது அறிவிக்கப்பட்ட பிறகு, விருப்ப மனு கொடுத்த பல பேர், போட்டியிட விருப்பமில்லை என்று கூறி பணத்தை திரும்பப் பெற்று வருகின்றனர். என்று கூறினார் சந்திரகுமார்.
 
மேலும், எனது தலைவர் விஜயகாந்த்தான் என்றும் அவர் திமுகவுடன்தான் கூட்டணி வைக்கவேண்டும் என்றும், தங்களை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்றும் நான் தேமுதிக கரைவேட்டியுடன்தான் இருப்போன் என்றும் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :