ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (13:33 IST)

ஆதரவற்ற குழந்தைகளுக்கு சொந்த காசில் தீபாவளி ஜவுளி! – நெகிழ வைத்த திமுக எம்.எல்.ஏ!

MLA Thangapandiyan
ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனது மூன்று மாத சம்பளத்தை செலவழித்து புத்தாடைகள் வாங்கி தந்த திமுக எம்.எல்.ஏவின் செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது.



தீபாவளி நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் மக்கள் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். புத்தாடைகள், பட்டாசுகள் என குடும்பத்தோடு தீபாவளியை கொண்டாட பலரும் தயாராகி வரும் நிலையில், குடும்பமற்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கி தந்து அவர்களுக்கும் தீபாவளி மகிழ்ச்சியானதாக உதவியுள்ளார் ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ தங்கபாண்டியன்.

தீபாவளியை கொண்டாட முடியாத நிலையில் உள்ள 233 ஆதரவற்ற குழந்தைகளை அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றிற்கு அழைத்து சென்ற தங்கபாண்டியன், அவர்களுக்கு பிடித்த புத்தாடைகளை வாங்கி கொடுத்துள்ளார். இதற்காக தனது 3 மாத சம்பளத்தை செலவு செய்துள்ளார் தங்கபாண்டியன். அவரது இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K