திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 11 அக்டோபர் 2017 (13:43 IST)

தினகரன் ஆதரவு எம்எல்ஏ மீது ஓபிஎஸ் ஆதரவாளர் சரமாரி தாக்குதல்?

தினகரன் ஆதரவு எம்எல்ஏ மீது ஓபிஎஸ் ஆதரவாளர் சரமாரி தாக்குதல்?

தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏவுமான ஏழுமலை மீது ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஏழுமலை திருவள்ளூரை அடுத்து வெள்ளவேடு அருகேயுள்ள கிராமத்தில் துக்க நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள சென்றார். அந்த நிகழ்ச்சியை முடித்த அவர் நேற்று இரவு அவரது காரில் திரும்பிக்கொண்டு இருந்தார்.
 
அப்போது அவரது காரை வழி மறித்த நைனா கண்ணு என்ற அதிமுக தொண்டர், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ஏழுமைலையின் கார் கண்ணாடியை தான் கொண்டு வந்த உருட்டுக்கட்டையால் தாக்கி உடைத்தார். இதில் கார் கண்ணாடி உடைந்து ஏழுமலையில் உதட்டை கிழித்தது.
 
இதனையடுத்து இரத்த காயத்துடன் இருந்த ஏழுமலை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ஏழுமலையை தாக்கிய அதிமுக தொண்டர் நைனா கண்ணு ஓபிஎஸ் ஆதரவாளர் என கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.