வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 10 டிசம்பர் 2021 (15:20 IST)

ஹெலிகாப்டர் தீயை அணைக்க ஓடிவந்த உள்ளூர் மக்கள்! – நன்றி தெரிவித்த டிஜிபி சைலேந்திரபாபு!

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு நன்றி தெரிவித்துள்ளார்.

ஊட்டி அருகே குன்னூரில் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இன்று 13 ராணுவ வீரர்கள் உடலும் டெல்லியில் ராணுவ மரியாதை செய்யப்படுகிறது.

நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டபோது உடனடியாக நஞ்சப்ப சத்திரத்தை சேர்ந்த கிராம மக்கள் பலர் தங்கள் வீடுகளில் இருந்த தண்ணீர் உள்ளிட்டவற்றை கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். உடனடியாக அங்கு போலீஸும் விரைந்த நிலையில் உள்ளூர் மக்கள் உதவியுடன் மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் வீரர்களை மீட்க உதவிய மக்களுக்கு கம்பளி உள்ளிட்ட பொருட்களை வழங்கிய தமிழக டிஜிபி சலேந்திரபாபு, அந்த மக்களிடம் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.